விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்

துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம்

 

1.

யோசுவாவின் சந்ததி நாமே

தேசத்தை சுதந்தரிப்போமே

உடன்படிக்கை பெட்டி நம்மோடு

ஊர் ஊராய் வலம் வருவோமே _ துதிப்போம்

 

2.

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்

கர்த்தர் தந்திடுவாரே

எதிர்த்து நிற்க எவராலுமே

முடியாதென்று வாக்குரைத்தாரே      _ துதிப்போம்

 

3.

மோசேயோடு இருந்ததுபோல‌

சேனைகளின் கர்த்தர் நம்மோடு

தளபதியாய் முன் செல்கிறார்

தளர்ந்திடாமல்பின் தொடர்வோம்  _ துதிப்போம்

 

4.

அச்சமின்றி துணிந்து செல்வோம்

அறிக்கைசெய்து ஆர்ப்பரிப்போமே

கர்த்தர் வார்த்தை நம் வாயிலே

நிச்சயமாய் வெற்றி பெறுவோமே  _ துதிப்போம்

 

5.

தேசத்து எதிரிகளெல்லாம்

திகில் பிடித்து நசுங்குகின்றனர்

கர்த்த்ர் செய்யும் அற்புதங்களை

கேள்விப்பட்டு கலங்குகின்றனர்    _ துதிப்போம்

 

  1. செங்கடலை வற்றச் செய்தவர்

சீக்கிர்த்தில் வெற்றி தருவார்

யோர்தானை நிற்கச் செய்தவர் _ நம்

பாரதத்தை ஆளுகை செய்வார்     _ துதிப்போம்

 



vizukuthu vizukuthu eriko koddai

ezumbuthu ezumbuthu iyesuvin padai

thuthibbom saththanai jaெyibbom

thuthibbom thechaththai sonthdhamakkuvom

 

1.

yosuvavin chanthdhathi name

thechaththai sudhanthdharibbome

utanpadikkai beddi nammodu

uur uuray valam varuvome _ thuthibbom

 

2.

kal mithikkum evvitaththaiyum

karthdhar dhanththiduvare

ethirththu nirka evaralume

mudiyathenru vakkuraiththare      _ thuthibbom

 

3.

moseyodu irunthdhathubola‌

senaikalin karthdhar nammodu

dhalapathiyay mun selkirar

dhalarnththidamalbin thotarvom  _ thuthibbom

 

4.

aschaminri thuninththu selvom

arikkaiseythu aarbparibbome

karthdhar varththai nam vayile

nischayamay verri beruvome  _ thuthibbom

 

5.

thechaththu ethirikalellam

thikil bidiththu nasungkukinranar

karththr seyyum arbudhangkalai

kelvibpaddu kalangkukinranar    _ thuthibbom

 

  1. sengkatalai varras seydhavar

sikkirththil verri dharuvar

yorthanai nirkas seydhavar _ nam

baradhaththai aalukai seyvar     _ thuthibbom